எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி 07.11.2025

சென்னை திருவேற்காடு எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதலில்  மிகச் சிறப்பாகக் கல்லூரி வளாகத்தில் இன்று 07/11/2025 அன்று காலை 8. 45 மணியளவில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த வேல்டெக் மல்டி டெக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டு எஸ் ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். கண்காட்சியாக அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள் குறித்த அரங்குகளைக் கண்டு களித்து  மாணவர்கள் அரங்கில் கூடினர். கல்லூரியின் தாளாளர் திரு.ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார் வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் வரவேற்று உரையாற்றினார் மாபெரும் தமிழ்க் கனவு என்னும் தலைப்பில் தமிழ்நாடு அரசின் மாணவர் கல்வி நலன் சார்ந்தும் வேலை வாய்ப்பு சார்ந்தும் காணொளிகளையும் கீழடி, இரும்பின் தொன்மை, மற்றும் ராஜ ராஜ சோழன் பற்றிய காணொளிக் காட்சியினைக் கண்டுகளித்தனர். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு சுரேஷ் அவர்கள் மாபெரும் தமிழ்க் கனவு திட்ட விளக்க உரையை வழங்கினார் விழாவில் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் கரு ஆறுமுகத்தமிழன் சுடர் முகம் தூக்கு எனும் தலைப்பில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையாற்றினார் இவரது உரை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் வானவர்கள் கூர்ந்து கவனிக்கும் வண்ணம் ஈர்ப்பாகவும் அமைந்திருந்தது. விழாவின் நிறைவில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வினாக்களை எழுப்பிய மாணவர்களுக்கும் சான்றிதழும் புத்தகப் பரிசுகளும் வழங்கப்பட்டன நிறைவில் கல்லூரியின் இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.  நிறைவில் நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நிர்வாகம் மிகச் சிறப்பாகச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.