எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும் உலகத் தமிழ்ப் பேரியக்கம் மற்றும் தமிழால் இணைவோம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது – 10.12.2025
சென்னை திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும் உலகத் தமிழ்ப் பேரியக்கம் மற்றும் தமிழால் இணைவோம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 10.12.2025 அன்று நடந்த இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் திரு ப. வெங்கடேஷ் ராஜா அவர்களும் கல்லூரியின் இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் தமிழ்த் துறைத் தலைவர் மா.விஜயகுமார் உலகத் தமிழ்ப் பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் திரு சத்திய நாராயண ராஜ் பால குரு மற்றும் பொதுச்செயலாளர்திரு சுப்பிரமணியன்ஆகியோர் இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இக்கல்லூரி மாணவர்கள் உலகளாவிய தமிழ் அறிஞர்களோடு கலந்துரையாடிப் படைப்பாற்றல் திறனை வளர்த்து மேடைப்பேச்சுப் பயிற்சி பெறவும் மாணவர்களின் இலக்கியத்திறன் வளரவும் பன்னாட்டு ஆய்வு மற்றும் கருத்தரங்குகள் நடத்தவும் வழிவகை செய்யப்படும். மூன்றாண்டுகள் தொடர்ந்து இப் புரிந்துணர்வு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ்ப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.





