எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, ஜூலை 7, 2026 அன்று ‘ஞாலத்தின் மாணப் பெரிது’ என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாக நடத்தியது.
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, ஜூலை 7, 2026 அன்று ‘ஞாலத்தின் மாணப் பெரிது’ என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை கல்லூரிக் கலையரங்கில் சிறப்பாக நடத்தியது. மாணவர்களின் தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் இக்கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகத் தொலைக்காட்சி புகழ் தன்னம்பிக்கைப் பேச்சாளர் திரு. முயற்சி முருகேசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. கு. சுரேஷ் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி இயக்குநர் முனைவர் வி. சாய் சத்தியவதி திருக்குறளின் மாண்பை எடுத்துரைத்து முன்னிலை உரை நிகழ்த்தினார். நிர்வாகம், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை இயக்குநர் முனைவர் கே.எஸ். பிரபாகர் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து முன்னிலை உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் திரு. முயற்சி முருகேசன் அவர்களை முனைவர் இரா. கவிதா அவைக்கு அறிமுகப்படுத்தினார்.
தமிழின் சிறப்புகளையும் குறளின் மாண்புகளையும் எடுத்துரைத்து கல்லூரி முதல்வர் முனைவர் சொ. அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். அதனை அடுத்து, மகாகவி பாரதி முத்தமிழ் மன்றப் பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் பேட்ஜ்கள் வழங்கப்பட்டன.
சிறிய விஷயங்களில்தான் மாற்றம் அடங்கி இருக்கிறது. காலத்தினால் செய்த பல்வேறு உதவிகளை உலக நிகழ்வுகளின் வாயிலாக எடுத்துக் காட்டினார். நல்ல மனித சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் திருக்குறளைப் படிக்க வலியுறுத்தினார். கல்வி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடிய கருவி.ஒரு முறை கல்வி கற்றால் ஏழு தலைமுறைகளும் வாழும் என்று கல்வியின் சிறப்பைச் சிறப்பு விருந்தினர் எடுத்துரைத்தார்.
உதவிப் பேராசிரியர் ம. ரம்யா நன்றியுரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் முனைவர் ஈ. இசக்கியம்மாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. ஸ்டாலின் சத்யா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.









