எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் அகத்தர மதிப்பீட்டுக் குழு இணைந்து நடத்தும் புத்தக வெளியீட்டு விழா ஜூலை 27, 2026
July 27, 2026
|By SacasEditor
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் அகத்தர மதிப்பீட்டுக் குழு இணைந்து நடத்தும் புத்தக வெளியீட்டு விழா ஜூலை 27, 2026 திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா. விக்னேஷ் குமார் அவர்கள் தொகுத்த ‘தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டு மரபுகள்’ என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட உள்ளது. இதில் முகை மழலையர் பள்ளி மற்றும் அகாடமி இயக்குநர் திருமதி. அனுகிரகா ஆதிபகவன் அவர்கள், சிறப்பு விருந்தினராக வருகை தரவுள்ளார். இந்நிகழ்வு கல்லூரிக் கலையரங்கில் மதியம் 2.30 மணியளவில் நடைபெறவுள்ளது.





