எஸ்.ஏ. கல்லூரியில் மகாகவி பாரதி முத்தமிழ் மன்றத் தொடக்கவிழா ஜூன் 24, 2026

எஸ்.ஏ. கல்லூரியில் மகாகவி பாரதி முத்தமிழ் மன்றத் தொடக்கவிழா ஜூன் 24, 2026 அன்று பிற்பகல் 12.30 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகச் சமூகப்பணிக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. ஆர். மஞ்சுளா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கல்லூரி நிர்வாகம், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவு இயக்குநர் முனைவர் கே. எஸ். பிரபாகர் முன்னிலை உரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் சொ. அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. ஸ்டாலின் சத்தியா தமிழ் மன்றம் குறித்து அறிமுகவுரை வழங்கினார். தமிழ்மன்றப் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. வீரராகவன் அவைக்கு அறிமுகப்படுத்தினார்.
சிறப்பு விருந்தினர் முனைவர் சி.ஆர். மஞ்சுளா, தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை எடுத்துரைத்து, ‘மொழியும் மாற்றமும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தமிழ் பயின்றால் கிடைக்கும் பணி வாய்ப்புகளையும் எடுத்துரைத்து மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
அதனையடுத்து மாணவர்கள் கவிதை, பாடல், உரை, நடனம் ஆகிய தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழ்துறை, மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு அருமையான களத்தை மகாகவி பாரதி முத்தமிழ் மன்றம் மூலம் அமைத்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.