எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற “நல்லதைச் சிந்திப்போம்’ நிகழ்ச்சி ஜூலை 30, 2024
July 31, 2024
|By SacasEditor
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து ஜூலை 30, 2024 அன்று காலை 10 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் ‘ நல்லதைச் சிந்திப்போம் ‘ என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக எத்திராஜ் மகளிர் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத்
தலைவர் முனைவர் அரங்க மல்லிகா கலந்து கொண்டு சிறப்பித்தார். ‘தவம் எது?’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய சிறப்பு விருந்தினர் தவம் என்பதன் விளக்கம், தவம் பற்றிய இலக்கியப் பதிவுகள், இளைஞர்கள் தம் கடமைகள் ஊடாக தவத்தை எவ்வாறு பின்பற்றுவது போன்ற பல்வேறு சிந்தனைகளை மாணவர்கள் முன் வைத்தார். மாணவர்களிடையே நல்ல சிந்தனைகளை விதைப்பதன் முன்னோட்டமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.