எஸ். ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய மகாகவி பாரதியார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி டிசம்பர் 12, 2024
எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய மகாகவி பாரதியார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி
டிசம்பர் 12, 2024 அன்று எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியின் பிறந்தநாளிற்கு “மெல்லிய தமிழுக்கு மீசை முளைத்தது” என்ற தலைப்பில் பேராசிரியர் திரு. த. அன்பு (எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பாரதிக்கும் காந்திக்கும் இருக்கும் உறவையும் அவர் அழகாக எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்த் துறைத் தலைவர் திரு.மா.விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார்.மூன்றாமாண்டு வணிகவியல் நிறுமச் செயலாண்மைத் துறையைச் சார்ந்த லித்திகா பாரதியாரின் பாடலைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். இரண்டாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த செல்வி.ரக்ஷிதா பாரதியின் பாடலுக்குப் பரதநாட்டியம் ஆடினார். இவ்விழா மாணவர்களின் திறமையையும் வெளிக்காட்ட உதவியது. இந்நிகழ்வு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைமையில் திருமதி ரேகாமணி அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவடைந்தது.