எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் முத்தமிழ் விழா ஆகஸ்ட் 4 மற்றும் 5, 2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் முத்தமிழ் விழா ஆகஸ்ட் 4 மற்றும் 5, 2025  ஆகிய இரு நாட்களில் சிறப்புற நடத்தியது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 4,  2025 அன்று மாணவர்களுக்கான  தனிநபர் பாட்டுப் போட்டி,  தனிநபர் நடனப் போட்டி  ஆகிய போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.  அந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5,  2025 அன்று காலை  10 மணிக்கு  நடைபெற்ற முத்தமிழ் விழாவில் மேனாள் அரசவைக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர் முத்துலிங்கம் அவர்களும், சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் தங்கசாரா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் தங்க சாரா அவர்கள் யாப்பிலக்கணக் கவிதையை கூறி அரங்கத்தையே மகிழ்வித்தார். இந்நிகழ்வில் திரு. முத்துலிங்கம் அவர்கள் ஆசிரியர்களது பெருமையையும் மாணவர்களது கவனிக்கும் திறனையும் பாராட்டி 99 குறிஞ்சி மலர்களைப் பற்றியும் கூறி உரையைச் சிறப்பித்தார். பிறகு, மாணவர்களுக்கு பரிசினை அளித்தனர். பரிசுப் பெற்ற மாணவர்கள் நடனமும் பாடலும் பாடி அரங்கத்தையே அதிர வைத்தனர். இந்நிகழ்வில் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.