எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேச்சுப் பயிற்சிப் பட்டறை ஆகஸ்ட் 13, 2025

*எஸ்.ஏ.கல்லூரியில் பேச்சுப் பயிற்சிப் பட்டறை* 

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேச்சுப் பயிற்சிப் பட்டறையை ஆகஸ்ட் 13, 2025 அன்று கல்லூரித் திரையரங்கில் நடத்தியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் திரு. துரைப்பண்டியன்  அவர்கள் உரையாற்றினார். 

இந்நிகழ்வில், இவர்  மாணவர்களுக்கு மேடையில் எவ்வாறு பேசுவது என்பதையும் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். மேடையில் பேசுவதற்கான உத்திகளையும் எவ்வாறு தகவல்கள் சேகரிக்க வேண்டும் என்பதையும் பயமின்றிப் பேச வேண்டும் என்பதையும் எவ்வாறு பேச வேண்டும் என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.  அதுமட்டுமின்றி, நம் அன்றாட வேளையில் செய்யக்கூடிய செயல்களையும் கூறினார்.

 இந்நிகழ்வில் தாய், தந்தை மற்றும் உறவினர்களுடன் வாழ வேண்டும் என்பதை நகைச்சுவையாக எடுத்துரைத்தார். இவர் பாடல்வழியாக மாணவர்களுக்குச் செய்தினைக்  கூறியதால் மிகவும் ஈடுபாட்டுடன் கவனித்தனர். பிறகு நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு நிறைவடைந்தது. இதில் 250 மாணவர்கள் கலந்து கொண்டு சிற்பித்தனர்.