எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் அகத்தர மதிப்பீட்டுக் குழு ஆகியவை இணைந்து பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகளை அக்டோபர் 9, 2026 அன்று மிகச்சிறப்பாக நடத்தின
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் அகத்தர மதிப்பீட்டுக் குழு ஆகியவை இணைந்து பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகளை அக்டோபர் 9, 2026 அன்று மிகச்சிறப்பாக நடத்தின. கல்லூரிக் கலையரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற தொடக்கவிழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சொ. அன்பழகன் தலைமையுரை ஆற்றி, போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார்.
பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி ஆகிய போட்டிகள் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் என இரு நிலைகளில் நடைபெற்றன. 37 பள்ளிகளைச் சேர்ந்த 282 மாணவர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
கவிஞர்.இனியவன்,
கவிஞர் சிந்தைவாசன்,
கவிஞர் கோசின்ரா,
முனைவர் முருகானந்தம்,
மருத்துவர் ஹேமா,
சாகித்யா ஆகியோரும்; எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேராசிரியர்கள் திரு. தங்க குமரன், திருமதி வினிதா, திரு. சந்திரசேகர், முனைவர் கோ. அம்பிகா, முனைவர் எம். நீலாபாய், திரு. பழனி ஆகியோரும் நடுவர்களாகப் பங்கேற்று, பரிசுக்குரிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழா கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா, முதல்வர் முனைவர் சொ. அன்பழகன், நிர்வாகம், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவு இயக்குநர் முனைவர் கே.எஸ். பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகத் தன்னம்பிக்கைப் பேச்சாளரும், செய்தி வாசிப்பாளருமான முனைவர் எஸ்.ஆர். பராசக்தி கலந்து கொண்டு, தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்து வலியுறுத்தினார். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்குப் பொற்கிழிப் பரிசுகளும், சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். செல்வி ரா. பிரியா, முனைவர் இரா. கவிதா மற்றும் திரு. சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து நடத்திய இப்போட்டி நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது. பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளங்காட்ட களம் அமைத்த நிகழ்ச்சியாக இப்போட்டி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
























