சென்னை திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து ஐ.நா சபை அறிவித்த குழந்தைத் திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியை 25.11.26 அன்று ICWO மற்றும் JRC உடன் சென்னையில் நடத்தியது
சென்னை திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து ஐ.நா சபை அறிவித்த குழந்தைத் திருமணத் தடுப்பு விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சியை 25.11.26 அன்று ICWO மற்றும் JRC உடன் சென்னையில் நடத்தியது. இதில் நம் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் உன்னத் பாரத்அபியான் மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வழிகாட்டிய நம் கல்லூரியின் தாளாளர் அவர்களுக்கும் கல்லூரியினுடைய இயக்குநர் அவர்களுக்கும் உற்சாகமூட்டி அனுப்பி வைத்த கல்லூரி முதல்வர் முனைவர் சீனிவாசன் அவர்களுக்கும் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பாகவும் உன்னத் பாரத் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.






