டால்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு முப்பெரும் விழா ஜூலை 31, 2025
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை டால்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு முப்பெரும் விழாவை ஜூலை 31, 2025 அன்று நடத்தியது. இந்நிகழ்வில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் டால்பின் என்னும் பாலூட்டி உயிரினம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இவ்விழிப்புணர்வு நடந்தது.
இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். இரசாயன வேதியியல் கழிவுகளைக் கடலில் கலக்காமல் இயற்கைச் சமநிலையைப் பாதுகாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் டால்பினை பற்றிய தகவல்கள் அடங்கிய காணொலி காட்சியைத் திரையிட்டனர்.
இதில், கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் கேடு விளைவிக்கும் நெகிழிக் குப்பைகள், குடுவைகள், பீங்கான் பாட்டில்கள் முதலியவற்றைக் கடலில் போடக்ககூடாது என்ற விழிப்புணர்வை அளித்தனர். இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.