எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை நடத்திய காந்தி ஜெயந்தி மற்றும் மரபால் மலர்வோம் நிகழ்ச்சி 09.10.2024
October 14, 2024
|By SacasEditor
மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக அக்டோபர் 9, 2024 அன்று காந்தி ஜெயந்தி மற்றும் மரபால் மலர்வோம் நிகழ்ச்சியைத் தமிழ்த்துறை நடத்தியது. இந்நிகழ்ச்சி மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக நிகழ்கிறது. இந்நிகழ்சசியின் சிறப்பு விருந்தினர், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், காந்தியவாதி ,புலவர்க்கரசன் திரு.பொன்னரசன், மகாத்மா காந்தியைப் பற்றிய செய்திகளைத் துல்லியமாகப் பேசினார். இந்நிகழ்ச்சியை மாணவர்கள் சிறப்பாகக் கவனித்தனர். அதுமட்டுமின்றிப் பாடல், நாடகம், பேச்சு என மாணவர்கள் அவர்களுடைய தனித்திறமைகளைச் சிறப்பு விருந்தினர் முன்னிலையில் வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சி செம்மையாக நிறைவடைந்தது.