எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜனவரி 12 மற்றும் 13, 2026 ஆகிய இரண்டு நாட்களில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜனவரி 12 மற்றும் 13, 2026 ஆகிய இரண்டு நாட்களில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஜனவரி 12, 2026 அன்று பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.
பட்டிமன்றத் தலைப்பு: பண்பாடும் கலாச்சாரமும் பாராட்டும்படி உள்ளதா! பரிதாபமாக உள்ளதா!
நடுவராக தொலைக்காட்சி புகழ் டாக்டர் எஸ்.பி. பாஸ்கர் பங்கேற்கிறார்.
பாராட்டும்படி உள்ளது! என்ற தலைப்பில்
டாக்டர் இரா. வேதநாயகி
செல்வி பவித்ரா ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.
பரிதாபமாக உள்ளது! என்ற தலைப்பில்
தமிழ் நெஞ்சன்
ரெ. லட்சுமி நாராயணன் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.
ஜனவரி 13, 2026 அன்று சமத்துவப் பொங்கல் விழா நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராகத் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் சினேகன் பங்கேற்கிறார். பிரசாந்தின் இசை முருகன் கிராமிய கலைக் குழுவினர் வழங்கும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியும், தாண்டவம் பரதநாட்டியக் குழு வழங்கும் பரதநாட்டிய நடனமும் நடைபெற உள்ளது. கிராமிய மணம் கமழும் பாரம்பரிய சமையல் அரங்குகள் காட்சிப்படுத்த உள்ளன.








