பள்ளி மாணவர்களிடம் தமிழ்ப் பற்றினை வளர்ப்பதற்கும் அவர்களின் கலை இலக்கியத் திறனை மேம்படுத்துவதற்கும் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் அக்டோபர் 9, 2026

எஸ்.ஏ‌. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, அக்டோபர் 9, 2026 அன்று, பள்ளி மாணவர்களிடம் தமிழ்ப் பற்றினை வளர்ப்பதற்கும் அவர்களின் கலை இலக்கியத் திறனை மேம்படுத்துவதற்கும் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு மாநில அளவிலான பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி, குழு நடனப் போட்டி ஆகியவற்றை நடத்திப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பிக்க உள்ளது.
கல்லூரிக் கலையரங்கில் நடைபெறும் இப்போட்டிகள் 6.7.8 ஆம் வகுப்பு, 9,10,11,12 ஆம் வகுப்பு என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. போட்டிகளுக்குப் பின் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் சான்றிதழ்களும் பரிசும் வழங்கப்படும்.