எஸ்.ஏ. கல்லூரியில் மாநில அளவிலான வாகை கலை இலக்கியப் போட்டிகள் பரிசளிப்பு விழா மார்ச் 10, 2026
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை, மாநில அளவிலான வாகை கலை இலக்கியப் போட்டிகள் பரிசளிப்பு விழாவை மார்ச் 10, 2026 அன்று காலை 9 மணிக்குச் சிறப்பாக நடத்தியது. சிறப்பு விருந்தினராகத் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருள் கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி முன்னிலையுரை நிகழ்த்தினார். தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா. விஜயகுமார் சிறப்பு விருந்தினர் முனைவர் ஒளவை அருள் அவர்களை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
மாநில அளவிலான வாகை கலை இலக்கியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் முனைவர் ஒளவை அருள் அவர்கள் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொற்கிழிப் பரிசையும், சான்றிதழ்களையும் வழங்கினார். முனைவர் ஒளவை அருள் அவர்கள் தமிழின் சிறப்புகளை எடுத்தியம்பி, திருக்குறள் முற்றோதலை மாணவர்களிடத்து வலியுறுத்தினார்.
பரிசு பெற்ற மாணவர்கள் உரையும், பாடல்களும் பாடி அவையோரை மகிழ்வித்தனர். கவிஞர் ஆவிச்சி கிருஷ்ணன் அவர்கள், மேடைப் பேச்சு பேசுவதற்கான சில நுணுக்கங்களைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைததார். கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா, இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, முத்தமிழின் மாண்பையும், மாணவர்களின் பங்களிப்பையும் இந்நிகழ்ச்சி சிறப்பாக விளக்கியது.









எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உலகத் தாய்மொழி தின விழாவை பிப்ரவரி 20, 2026 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடியது
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உலகத் தாய்மொழி தின விழாவை பிப்ரவரி 20, 2026 அன்று கல்லூரித் திரையரங்கில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. தாய்மொழியின் முக்கியத்துவத்தையும், தமிழ் மொழியின் சிறப்பையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் திரு.ராஜா மற்றும் சூப்பர் சிங்கர் பின்னணிப் பாடகி செல்வி சாரா சுருதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்குக் கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி தமிழ் மொழியின் மாண்புகளை எடுத்துரைத்து சிறப்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் திரு. ராஜா மற்றும் செல்வி சாரா சுருதி ஆகியோர் செவிக்கினிய தமிழிசைப் பாடல்களையும், திரையிசைப் பாடல்களையும் பாடி அவையோரை மகிழ்வித்தனர். அதனையடுத்து மாணவர்கள் தமிழ் மொழியின் சிறப்பைப் பறைசாற்றும் வண்ணம் கவிதை மற்றும் உரைகள் வழங்கினர். இந்நிகழ்ச்சி தாய்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புகளை இளைஞர்களிடத்துப் பெரிதும் வலியுறுத்தியது.









Department of Tamil, S.A. College of Arts & Science, successfully organized inter-collegiate arts and literary competitions for college students under the title “Vaagai 2026” on 29.01.2026
SACAS Hosts “Vaagai 2026” Inter-Collegiate Arts and Literary Competitions
The Department of Tamil, S.A. College of Arts & Science, successfully organized inter-collegiate arts and literary competitions for college students under the title “Vaagai 2026” on January 29, 2026. The event aimed to promote artistic expression and literary interest among young learners. Various competitions such as speech, singing, and quiz were conducted as part of the programme.
The inaugural session was graced by renowned film lyricist Pavalar Arivumathi, who attended the event as the chief guest. In his address, he inspired the students by highlighting the richness of Sangam literature, modern poetry, and film songs, and strongly emphasized the importance of nurturing a deep love for the Tamil language among the youth.
A total of 119 students from 61 colleges participated enthusiastically in the competitions. All participants were awarded participation certificates. The prize distribution ceremony for Vaagai 2026 will be held shortly. The event was widely appreciated for successfully fostering arts and literary awareness among college students.















எஸ்.ஏ. கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலக் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் ஜனவரி 12
எஸ்.ஏ. கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலக் கொண்டாட்டம்
தமிழர்தம் பாரம்பரிய சிறப்பைப் பறைசாற்றும் வண்ணம் சென்னை திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா மிகச் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பொங்கல் சிறப்பு பட்டிமன்றம், பிரசாந்தின் இசை முருகன் கிராமிய கலைக் குழுவினர் வழங்கும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி, தாண்டவம் பரதநாட்டியக் குழு வழங்கும் பரதநாட்டியம், மாணவர்களின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய மணம் கமழும் பாரம்பரிய சமையல் அரங்குகள் என சமத்துவப் பொங்கல் மற்றும் ஐம்பெரும் விழாவாக எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி முழுவதும் கிராமிய மணம் கமழ்ந்தது. கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா தலைமையில், இயக்குநர் முனைவர் வி. சாய் சத்யவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் ஆகியோர் முன்னிலையில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகத் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் சினேகன் கலந்து கொண்டு சிறப்பித்தார். தம்முடைய திரைப்படப் பாடல் அனுபவங்கள், வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைத்து அனுபவமே வாழ்க்கையாக முகிழ்க்கிறது என்று குறிப்பிட்டார். தமிழ்த்துறை ஒருங்கிணைத்து நடத்திய இப்பொங்கல் விழாவில் கிராமிய மணம் கமழும் பல்வேறு அரங்குகள், இராட்டினங்கள், பஞ்சு மிட்டாய், சவ்வு மிட்டாய், குதிரை வண்டி, உறியடி என ஒரு கிராமமே எஸ்.ஏ. கல்லூரிக்கு வந்திறங்கியதோ என எண்ணும் அளவுக்குக் கல்லூரி அழகுடன் பரிமளித்தது.


















Pongal Festival Celebrated with Grandeur at S.A. College of Arts & Science on 13.01.2026
Pongal Festival Celebrated with Grandeur at S.A. College of Arts & Science
The Pongal festival was celebrated with great enthusiasm and traditional splendour at S.A. College of Arts & Science, Thiruverkadu, Chennai, on 12th and 13th of January, 2026 highlighting the rich cultural heritage of Tamil Nadu. The campus transformed into a vibrant rural landscape with a variety of traditional programmes, including a special Pattimandram, folk performances by Prasanth’s Isai Murugan Gramiya Kalai Kuzhu, Bharatanatyam by the Thandavam troupe, and cultural performances by students. Traditional food stalls, rural games, bullock-cart displays, pot-breaking events, and native sweets added to the festive spirit.
The celebration was held under the leadership of the Correspondent Thiru P. Venkatesh Raja, in the presence of Director Dr. V. Sayi Satyavathi and Principal Dr. Malathi Selvakkumar. Renowned film lyricist and poet Snehan graced the occasion as the chief guest and shared inspiring insights from his life and professional experiences. Organised by the Department of Tamil, the event created a truly immersive village atmosphere, making the festival a memorable cultural celebration.
















எஸ்.ஏ. கல்லூரியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்திய முத்தமிழ் முகாம் நிகழ்ச்சி டிசம்பர் 24, 2025
எஸ்.ஏ. கல்லூரியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்திய முத்தமிழ் முகாம் நிகழ்ச்சி
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலைப் பண்பாட்டு இயக்கம் மற்றும் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து முத்தமிழ் முகாம் நிகழ்ச்சியை டிசம்பர் 24, 2025 அன்று காலை 10 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடத்திய து. முத்தமிழின் மாண்பினை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி முன்னிலை உரை நிகழ்த்தினார். இயல் தமிழ் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் இயக்ககம் (பணிநிறைவு) டாக்டர் செய. ராசமூர்த்தி அவர்கள் தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை தமிழ் இலக்கியங்களின்வழி எடுத்துரைத்தார். இசைத்தமிழ் என்ற தலைப்பில் திரைப்பட இசை அமைப்பாளர் கலைமாமணி தாயன்பன் அவர்கள் தமிழ் இலக்கியங்களில் காணலாகும் இசைத்தமிழ்க் கூறுகளையும், திரை இசைப் பாடல்களையும் பற்றிக் குறிப்பிட்டார். நாடகத் தமிழ் என்ற தலைப்பில் திரைப்படப் பாடல் ஆசிரியர் கலைமாமணி கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் நாடகத் தமிழின் தோற்றம் வளர்ச்சி பற்றி உரை நிகழ்த்தினார்.
தமிழ்த்துறைத் தலைவர் திரு மா. விஜயகுமார் நன்றி உரை வழங்கினார். முனைவர் ஈ. இசக்கியம்மாளின் தொகுப்புரையுடன் திரு மா. விஜயகுமார், திருமதி அ. விஜயலட்சுமி மற்றும் திரு. க. வீரராகவன் ஆகியோர் நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.










எஸ்.ஏ. கல்லூரியில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த புத்தகம் பேசுது நிகழ்ச்சி டிசம்பர் 23, 2025
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் ' புத்தகம் பேசுது' நிகழ்ச்சியை டிசம்பர் 23, 2025 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடத்தியது. சிறப்பு விருந்தினராகப் பட்டிமன்றப் பேச்சாளரும் கவிஞருமான இனியவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தமிழ்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.விக்னேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் திருமதி அ. விஜயலட்சுமி சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகப்படுத்தினார். இன்றைய நவீன உலகில் ஒவ்வொருவரும் தம்மை மேம்படுத்திக் கொள்ளத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்வது இன்றியமையாதது. நாளும் நூல்கள் பல கற்றுப் பல்துறை அறிவைப் பெறுவது அவர்களின் அறிவை மட்டுமல்லாது அவர்களின் வளர்ச்சியையும் சிறக்கச் செய்யும். ஆதலால் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் 'எனக்குப் பிடித்த புத்தகம் ' பற்றி எட்டு மாணவர்கள் தம் கருத்துகளை அழகாகப் பதிவு செய்தனர்.
அதனனத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கவிஞர் இனியவன் நூல் வாசிப்பின் பயன்கள், இலக்கியத் தேடல், நூல்களைத் தேர்வு செய்தல், பல்துறை அறிவு போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து, மாணவர்களிடத்து நூல்களைப் படிக்க வலியுறுத்தினார். நிகழ்ச்சியை தமிழ்த்துறைத் தலைவர் திரு மா. விஜயகுமார் மற்றும் உதவிப் பேராசிரியர் ரா. பிரியா ஆகியோர் அழகாக ஒருங்கிணைத்திருந்தனர். ரா. பிரியா நன்றியுரை வழங்கினார். முனைவர் சித்ரா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். மாணவர்களின் அறிவை மெருகூட்ட இந்நிகழ்ச்சி பெரிதும் உதவியது.










எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும் உலகத் தமிழ்ப் பேரியக்கம் மற்றும் தமிழால் இணைவோம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது - 10.12.2025
சென்னை திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும் உலகத் தமிழ்ப் பேரியக்கம் மற்றும் தமிழால் இணைவோம் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 10.12.2025 அன்று நடந்த இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் திரு ப. வெங்கடேஷ் ராஜா அவர்களும் கல்லூரியின் இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் தமிழ்த் துறைத் தலைவர் மா.விஜயகுமார் உலகத் தமிழ்ப் பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் திரு சத்திய நாராயண ராஜ் பால குரு மற்றும் பொதுச்செயலாளர்திரு சுப்பிரமணியன்ஆகியோர் இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இக்கல்லூரி மாணவர்கள் உலகளாவிய தமிழ் அறிஞர்களோடு கலந்துரையாடிப் படைப்பாற்றல் திறனை வளர்த்து மேடைப்பேச்சுப் பயிற்சி பெறவும் மாணவர்களின் இலக்கியத்திறன் வளரவும் பன்னாட்டு ஆய்வு மற்றும் கருத்தரங்குகள் நடத்தவும் வழிவகை செய்யப்படும். மூன்றாண்டுகள் தொடர்ந்து இப் புரிந்துணர்வு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ்ப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி 07.11.2025
சென்னை திருவேற்காடு எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் மிகச் சிறப்பாகக் கல்லூரி வளாகத்தில் இன்று 07/11/2025 அன்று காலை 8. 45 மணியளவில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த வேல்டெக் மல்டி டெக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டு எஸ் ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். கண்காட்சியாக அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள் குறித்த அரங்குகளைக் கண்டு களித்து மாணவர்கள் அரங்கில் கூடினர். கல்லூரியின் தாளாளர் திரு.ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார் வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் வரவேற்று உரையாற்றினார் மாபெரும் தமிழ்க் கனவு என்னும் தலைப்பில் தமிழ்நாடு அரசின் மாணவர் கல்வி நலன் சார்ந்தும் வேலை வாய்ப்பு சார்ந்தும் காணொளிகளையும் கீழடி, இரும்பின் தொன்மை, மற்றும் ராஜ ராஜ சோழன் பற்றிய காணொளிக் காட்சியினைக் கண்டுகளித்தனர். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு சுரேஷ் அவர்கள் மாபெரும் தமிழ்க் கனவு திட்ட விளக்க உரையை வழங்கினார் விழாவில் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் கரு ஆறுமுகத்தமிழன் சுடர் முகம் தூக்கு எனும் தலைப்பில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையாற்றினார் இவரது உரை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் வானவர்கள் கூர்ந்து கவனிக்கும் வண்ணம் ஈர்ப்பாகவும் அமைந்திருந்தது. விழாவின் நிறைவில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வினாக்களை எழுப்பிய மாணவர்களுக்கும் சான்றிதழும் புத்தகப் பரிசுகளும் வழங்கப்பட்டன நிறைவில் கல்லூரியின் இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிறைவில் நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நிர்வாகம் மிகச் சிறப்பாகச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.














எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேச்சுப் பயிற்சிப் பட்டறை ஆகஸ்ட் 13, 2025
*எஸ்.ஏ.கல்லூரியில் பேச்சுப் பயிற்சிப் பட்டறை*
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை பேச்சுப் பயிற்சிப் பட்டறையை ஆகஸ்ட் 13, 2025 அன்று கல்லூரித் திரையரங்கில் நடத்தியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் திரு. துரைப்பண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
இந்நிகழ்வில், இவர் மாணவர்களுக்கு மேடையில் எவ்வாறு பேசுவது என்பதையும் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். மேடையில் பேசுவதற்கான உத்திகளையும் எவ்வாறு தகவல்கள் சேகரிக்க வேண்டும் என்பதையும் பயமின்றிப் பேச வேண்டும் என்பதையும் எவ்வாறு பேச வேண்டும் என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அதுமட்டுமின்றி, நம் அன்றாட வேளையில் செய்யக்கூடிய செயல்களையும் கூறினார்.
இந்நிகழ்வில் தாய், தந்தை மற்றும் உறவினர்களுடன் வாழ வேண்டும் என்பதை நகைச்சுவையாக எடுத்துரைத்தார். இவர் பாடல்வழியாக மாணவர்களுக்குச் செய்தினைக் கூறியதால் மிகவும் ஈடுபாட்டுடன் கவனித்தனர். பிறகு நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு நிறைவடைந்தது. இதில் 250 மாணவர்கள் கலந்து கொண்டு சிற்பித்தனர்.















