எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் முத்தமிழ் விழா ஆகஸ்ட் 4 மற்றும் 5, 2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் முத்தமிழ் விழா ஆகஸ்ட் 4 மற்றும் 5, 2025  ஆகிய இரு நாட்களில் சிறப்புற நடத்தியது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 4,  2025 அன்று மாணவர்களுக்கான  தனிநபர் பாட்டுப் போட்டி,  தனிநபர் நடனப் போட்டி  ஆகிய போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.  அந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5,  2025 அன்று காலை  10 மணிக்கு  நடைபெற்ற முத்தமிழ் விழாவில் மேனாள் அரசவைக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர் முத்துலிங்கம் அவர்களும், சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் தங்கசாரா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் தங்க சாரா அவர்கள் யாப்பிலக்கணக் கவிதையை கூறி அரங்கத்தையே மகிழ்வித்தார். இந்நிகழ்வில் திரு. முத்துலிங்கம் அவர்கள் ஆசிரியர்களது பெருமையையும் மாணவர்களது கவனிக்கும் திறனையும் பாராட்டி 99 குறிஞ்சி மலர்களைப் பற்றியும் கூறி உரையைச் சிறப்பித்தார். பிறகு, மாணவர்களுக்கு பரிசினை அளித்தனர். பரிசுப் பெற்ற மாணவர்கள் நடனமும் பாடலும் பாடி அரங்கத்தையே அதிர வைத்தனர். இந்நிகழ்வில் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் முத்தமிழ் விழா ஆகஸ்ட் 4 மற்றும் 5, 2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் முத்தமிழ் விழா ஆகஸ்ட் 4 மற்றும் 5, 2025  ஆகிய இரு நாட்களில் சிறப்புற நடத்தியது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 4,  2025 அன்று மாணவர்களுக்கான  தனிநபர் பாட்டுப் போட்டி,  தனிநபர் நடனப் போட்டி  ஆகிய போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.  அந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5,  2025 அன்று காலை  10 மணிக்கு  நடைபெற்ற முத்தமிழ் விழாவில் மேனாள் அரசவைக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர் முத்துலிங்கம் அவர்களும், சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் தங்கசாரா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் தங்க சாரா அவர்கள் யாப்பிலக்கணக் கவிதையை கூறி அரங்கத்தையே மகிழ்வித்தார். இந்நிகழ்வில் திரு. முத்துலிங்கம் அவர்கள் ஆசிரியர்களது பெருமையையும் மாணவர்களது கவனிக்கும் திறனையும் பாராட்டி 99 குறிஞ்சி மலர்களைப் பற்றியும் கூறி உரையைச் சிறப்பித்தார். பிறகு, மாணவர்களுக்கு பரிசினை அளித்தனர். பரிசுப் பெற்ற மாணவர்கள் நடனமும் பாடலும் பாடி அரங்கத்தையே அதிர வைத்தனர். இந்நிகழ்வில் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறன்வளர் நிகழ்வு ஆகஸ்ட் 1, 2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறன்வளர் நிகழ்வு

 எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் நோக்கில்  மாணவர் திறன்வளர் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 'நீங்களும் பேச்சாளர் ஆகலாம்' என்ற திறன்வளர் நிகழ்வு ஆகஸ்ட் 1, 2025 அன்று கல்லூரித் திரையரங்கில் நடைபெற்றது. எத்திராஜ் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ம. எஸ்தர் ஜெகதீசுவரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

  சிறந்த பேச்சாளருக்கு அவையை தன்வயப்படுத்தும் திறன், செறிந்த தகவல்கள், தெளிவான உச்சரிப்பு, ஈர்க்கும் உரை வீச்சு, மிகச் சிறந்த கண்ணோட்டம் ஆகிய பண்புகள் இன்றியமையாதன என்று வலியுறுத்தினார். டாக்டர் அப்துல் கலாம்,  இரா.பி. சேதுப்பிள்ளை, பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, சுகிசிவம் போன்ற மிகச் சிறந்த பேச்சாளர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் மிகச் சிறந்த பேச்சுத் திறனை சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.  சிறப்பு  விருந்தினரின் உரையைக் கேட்ட மாணவர்கள்  சிறந்த பேச்சாளராக உருவாவதற்கான உந்துதலைப் பெற்றனர். மாணவர்களின் பேச்சுத்திறனை இனங்கண்டு, அவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்த இந்நிகழ்ச்சி களம் அமைத்துக் கொடுத்தது சிறப்புக்குரியது.


டால்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு முப்பெரும் விழா ஜூலை 31, 2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை  டால்பின்  பாதுகாப்பு விழிப்புணர்வு முப்பெரும் விழாவை ஜூலை 31, 2025 அன்று நடத்தியது. இந்நிகழ்வில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் டால்பின் என்னும் பாலூட்டி உயிரினம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இவ்விழிப்புணர்வு நடந்தது. 

இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். இரசாயன வேதியியல் கழிவுகளைக் கடலில் கலக்காமல் இயற்கைச் சமநிலையைப் பாதுகாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் டால்பினை பற்றிய தகவல்கள் அடங்கிய காணொலி காட்சியைத் திரையிட்டனர்.  

இதில், கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் கேடு விளைவிக்கும் நெகிழிக் குப்பைகள், குடுவைகள், பீங்கான் பாட்டில்கள் முதலியவற்றைக் கடலில் போடக்ககூடாது என்ற விழிப்புணர்வை அளித்தனர்.  இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


எஸ்.ஏ.  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மரபால் மலர்வோம் நிகழ்ச்சி ஜூலை 28,  2025

எஸ்.ஏ.  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தமிழ்த்துறையின் மரபால் மலர்வோம் நிகழ்ச்சி ஜூலை 28,  2025 அன்று கல்லூரித் திரையரங்கில் நடைபெற்றது.‌     முதலாம் ஆண்டு மாணவர்களுடைய திறமைகளை வெளிக்கொணர்வதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் அருமையாகப் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் நடிப்பின் மூலமாக அவர்களின் திறன்களை  வெளிப்படுத்தினர். இதில் மரபால் மலர்வோம் மாணவர் திறன் வளர் நிகழ்வு -1 என்ற தலைப்பில், பிழையின்றி மேடையில் தமிழ் பேசுதல் போட்டி மற்றும் மௌன மொழிப் போட்டியில் மாணவர்கள் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர். அவர்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக்  கொள்ளவும் மேடையில் தைரியமாக பேசுவதற்காகவும்  இந்நிகழ்வு ஒரு வாய்ப்பாக  அமைந்தது.


Department of Tamil at S.A. College of Arts & Science proudly organized the inauguration of the Mahakavi Bharathiyar Muthamizh Mandram on 09.07.2025

Inauguration of Mahakavi Bharathiyar Muthamizh Mandram at SACAS 

The Department of Tamil at S.A. College of Arts & Science proudly organized the inauguration of the Mahakavi Bharathiyar Muthamizh Mandram on July 9, 2025, in the college auditorium. The event featured a special address by Dr. S. Sellapillai, Assistant Professor, Department of Tamil, DG Vaishnav College, on the theme “Read Literature! Grasp Grammar!”

In his address, Dr. Sellapillai emphasized the importance of education, the value of discipline, and the need to set clear goals. Drawing from Tamil literary works and historical events, he offered inspiring thoughts to guide students towards success. He stressed that Tamilians should not just be good individuals but also be capable and empowered. He explained various methods through which students can enhance their skills and become competent contributors to society.

He encouraged students to develop self-awareness, recognize their strengths, and improve their talents—while also cultivating human values and respecting human dignity in life. The special lecture instilled the strong belief that studying Tamil literature will certainly help one achieve their goals.


எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக வாசிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு பிப்ரவரி 12.02.2025

*எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தக வாசிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு*

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத்துறை, தமிழ்த்துறை மற்றும் இந்திய அறிவு அமைப்பு ஆகியவை இணைந்து 'புத்தகம் வாசிப்பும் நேசிப்பும்' என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவை பிப்ரவரி 12,  2025 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடத்தின. ஆரோக்கியமான புதிய சிந்தனைகளை வளர்ப்பதற்கும்,  புதியனவற்றைக் கற்றுக் கொள்வதற்கும்,  புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தேவை நல்லதொரு புத்தக வாசிப்புப் பயிற்சி.  இத்தகைய நல்ல நூல்களைத் தேடிப் படித்து,  மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு  இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மேலசிவபுரி கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேனாள் நூலகரும்,  நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை மேனாள் துறைத்தலைவருமான முனைவர் ந. முருகேச பாண்டியன் கலந்துகொண்டு சிறப்பித்தார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. க. வீரராகவன் விழாவுக்கு வந்தோரை வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.‌ தமிழத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஈ. இசக்கியம்மாள் சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா. விஜயகுமார் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார்.‌ 

     தொடர்ந்து கற்றல் என்பது நம்மை என்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கக் கூடியது;  இன்பம் பயக்கக்கூடியது;  சமூகத்தில் நம்மை நிலைநிறுத்தக்கக் கூடியது என்பதனைப் பல இலக்கியச் சான்றுகளையும்,  பல நூல்களையும் எடுத்துரைத்துப் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தைச் சிறப்பு விருந்தினர் வலியுறுத்தினார். நிகழ்ச்சியின் நிறைவாகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.விக்னேஷ் குமார் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திருமதி அ. விஜயலட்சுமி அவர்களின் தொகுப்புரையுடன், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் திரு. க.  வீரராகவன் மற்றும் ம. ரம்யா ஆகியோரை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது.


எஸ்.ஏ. கல்லூரியில் திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகள் பரிசளிப்பு விழா 30.01.2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை,  திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு மற்றும் பொங்கல் விழா பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை ஜனவரி 4,  2025 அன்று நடத்தியது. கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா ஜனவரி 30,  2025 அன்று கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகச் சென்னை உயர்நீதிமன்ற மேனாள்  நீதிபதி மாண்பமை நீதியரசர் முனைவர் ப. ஜோதிமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரித் தாளாளர் திரு. ப. வெங்கடேஷ் ராஜா அவர்களின் தலைமையில் பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இளம் வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவர் ர.ஹே. கிஷோர் வரவேற்புரை நிகழ்த்தினார்.‌ கல்லூரி இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி முன்னிலை உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வாழ்த்துரை வழங்கினார். போட்டி பற்றிய அறிகையைத்  தமிழ்த்துறைத் தலைவர் திரு. மா.விஜயகுமார் வாசித்தார்.‌

சிறப்பு விருந்தினர் மாண்பமை நீதியரசர் முனைவர் ப.  ஜோதிமணி அவர்கள் ஒழுக்கத்தின் மாண்பினையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பற்றிக் குறிப்பிட்டு இயற்கை வளங்களைக் காக்குமாறு அவையோரை வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களின் உரைகளும்,  நடனங்களும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுத் தொகையும்,  நூல்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன. இளம் வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஜா. ஷபரிதா நன்றியுரை வழங்கினார்.  இளம் வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவியர் ரா. கீர்த்திகா மற்றும் ஷாசின் பாத்திமா ஆகியோர் நிகழ்ச்சியை அழகுறத் தொகுத்து வழங்கினர். பள்ளி மாணவர்களின் கலைத்திறனையும் படைப்பாக்கத் திறனையும் ஊக்குவிக்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.


எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் புத்தகக் கண்காட்சி 30.01.2025 to 31.01.2025

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை  மற்றும் தமிழ்த்துறை இணைந்து புத்தகக் கண்காட்சியை ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தின. புத்தகக் கண்காட்சியின்  முதல் நாளான ஜனவரி 30, 2025 அன்று நடைபெற்ற தொடக்க விழாவில்  இயக்குநர் சாய் சத்யவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார், மேலாண்மைப் பள்ளி இயக்குநர் முனைவர் ஆர். விஜி ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் முனைவர் பி.கே. மாதவன் 'புத்தகங்களில் பிறந்தவன்'என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொழில்முறைக்  கணக்காளர் திரு. ஆவிச்சி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  அவர் 'நூலகம்: உலகை வெல்வதற்கு விதைகளை விதைப்பதற்கான இடம்'  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி, நூலகங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

புத்தகக் கண்காட்சியின் இரண்டாம் நாளான ஜனவரி 31,  2025 அன்று  தொலைக்காட்சி புகழ் மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் திருமதி ரம்யா அசோக் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் தி இந்து  பப்ளிகேஷன், கோரல் பப்ளிஷர்ஸ், சிஎஸ்பி புக்ஸ், விஜய் நிக்கோல் இம்ப்ரிண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், விஆர்1 பப்ளிஷர், கல்யாணி பப்ளிஷர் மற்றும் ஹிந்துஸ்தான் புக்ஸ் போன்ற புகழ்பெற்ற பதிப்பகங்களின் புத்தகக் கடைகள் இடம்பெற்றன. புத்தகக் கண்காட்சியைப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் பேராசிரியப் பெருமக்களும் ஆர்வத்துடன் புத்தகக் கடைகளைப் பார்வையிட்டுப் புத்தகங்கள் வாங்கி மகிழ்ந்தனர். இந்நிகழ்வு புத்தக ஆய்வுக்கான சிறந்த தளத்தை வழங்கியதோடு மட்டுமல்லாமல், கல்வி மற்றும் அறிவுசார் வளர்ச்சியில் நூலகங்களின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தியது.

 


எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழா மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா 24.01.2025

எமது எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழா மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழா கீழடி அருங்காட்சியகம் திறப்பு விழா சார்ந்த தமிழக அரசின் நிகழ்ச்சிக்கான காணொளிக் காட்சியினை எமது கல்லூரி மாணவர்கள் அரங்கில் கண்டு மகிழ்ந்தனர். அதற்கான நிழற்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.